சதயம் நட்சத்திர தாரபலன், ஜெயிக்க வைக்கும் தாரைகள்

சதயம் சாதக நட்சத்திரங்கள்; சிக்கலான நட்சத்திரங்கள்; பலம் கொடுக்கும் நட்சத்திரங்கள்

சதயம் நட்சத்திரம் மற்றும், சுப தாரைகள் பற்றிய விளக்கங்களைக் காணலாம்.

Shathabhisha star in tamil


சதயம் நட்சத்திரம் குழந்தை பெயர்கள்

முதல் பாதம்: கோ என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
2-வது பாதம்: ஸ என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
3-வது பாதம்: ஸி என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
4-வது பாதம்: ஸு என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது

இவர்கள் தங்களது நட்சத்திர அதிதேவதையான யமதர்மனை வழிபடுவதால், நலம் உண்டாகும்.


தெற்காசியா முழுவதும் கட்டி ஆண்டு, வரலாற்று புகழ் பெற்ற தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தை கட்டிய மாமன்னன் ராஜ ராஜ சோழன் பிறந்த நட்சத்திரம் சதய நட்சத்திரம்.

சதய நட்சத்திரம் பூங்கொத்து மற்றும் வட்ட வடிவம் போன்று இருப்பதால், இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள். இவற்றை தங்கள் தொழில் மற்றும் வணிகத்திற்கான லோகோவாக பயன்படுத்தலாம்.

சதயம் ஜென்ம நட்சத்திரத்துக்கு வெற்றி தரும் நட்சத்திரங்கள், நட்சத்திர தாரபலன்

புனர்பூசம், விசாகம், ரோகிணி, திருவோணம், மிருகசீரிடம், அவிட்டம், ரேவதி.


நட்சத்திரங்களுக்கான தாராபலம் பற்றிப் பார்த்து வருகிறோம். இந்தப் பதிவில் சதயம் தாரா பலத்தை பார்க்கலாம்.


சதயம் ஜென்ம தாரை நட்சத்திரங்கள்.


திருவாதிரை,சுவாதி,சதயம்


இந்த மூன்று நட்சத்திரங்களும் உங்களுக்கு ஜென்ம நட்சத்திரமாக வேலை செய்யும். சுபகாரியங்கள் அனைத்தும் செய்யலாம். ஆண்களுக்கு திருமணம் செய்யக்கூடாது, பெண்களுக்கு வளைகாப்பு செய்யக்கூடாது, மேலும் முடி திருத்துதல், சவரம் செய்தல், எண்ணெய்க் குளியல், நகம் வெட்டுதல், தாம்பத்தியம் போன்றவை கூடாது. மற்றபடி அனைத்து சுப விசேஷங்களும் செய்யலாம்.


சதயம் சம்பத்து தாரை நட்சத்திரங்கள்.


புனர்பூசம்,விசாகம்,பூரட்டாதி


சுப தாரை
இந்த மூன்று சுப தாரை நட்சத்திரங்கள், & சம்பத்து தாரை நட்சத்திரங்களாகும். இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் எல்லாவிதமான சுப காரியங்களும் செய்யலாம். தொழில் தொடங்குவது, வியாபாரம் ஆரம்பிப்பது, பணவரவு தொடர்பான விஷயங்கள் போன்ற அனைத்துக்கும் இந்த சம்பத்து என்னும் செல்வ வளத்தை தரக்கூடிய தாரையாகும்.


சதயம் விபத்து தாரை நட்சத்திரங்கள் .


பூசம்,அனுஷம்,உத்திரட்டாதி


அசுப தாரை
இந்த மூன்று சிக்கலான நட்சத்திரங்கள், விபத்து என்னும் கடுமையான பாதிப்புகளைத் தரும். இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் மேற்கொள்ளும் எந்தக் காரியமும் விபத்தால் ஏற்படும் சேதாரம் போல கடுமையான பாதிப்புகளைத் தரும். பயணம் செய்யக்கூடாது, கடன் வாங்கக் கூடாது, புதிய முயற்சிகள் செய்யக்கூடாது.


சதயம் க்ஷேம தாரை நட்சத்திரங்கள் .


ஆயில்யம்,கேட்டை ,ரேவதி


சுப தாரை
இந்த மூன்று நட்சத்திரங்களும் க்ஷேம தாரை நட்சத்திரங்களாகும். இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் மேற்கொள்ளும் எந்தக் காரியமும் பலமடங்கு ஆதாயத்தைத் தரக்கூடியதாக இருக்கும். வீடு வாங்குதல், வாகனம் வாங்குதல், ஆடை ஆபரணம் வாங்குதல் போன்றவை மேற்கொள்ளலாம்.


சதயம் பிரத்தியக்குத் தாரை நட்சத்திரங்கள் .


அஸ்வினி,மகம்,மூலம்


இந்த மூன்று நட்சத்திரங்களும் பிரத்தியக்கு தாரை நட்சத்திரங்கள். பிரத்தியக்கு என்றால் பிறத்தியாருக்கு நன்மை என்று பொருள். ஆக எந்தவொரு காரியம் செய்தாலும் அது மற்றவருக்கு நன்மையாக இருக்குமே தவிர, உங்களுக்கு எந்த வகையிலும் உதவாது என்று அர்த்தம். எனவே, இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் புதிய முயற்சிகளில் ஈடுபடுவது, வியாபார விஷயங்களில் ஈடுபடுவது, தொழில் தொடர்பான விஷயங்களில் ஒப்பந்தங்கள் போடுவது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.


சதயம் சாதக தாரை நட்சத்திரங்கள்.


பரணி,பூரம்,பூராடம்


சுப தாரை
இந்த மூன்று நட்சத்திரங்களும் சாதக தாரை நட்சத்திரங்கள். இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் மேற்கொள்ளும் எந்தவொரு காரியமும் உங்களுக்கு மன மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கும். வேலைக்கு முயற்சி செய்வது, பதவி உயர்வு பெற்று பணியில் சேர்வது, இடமாற்றம் தொடர்பான விஷயங்களை மேற்கொள்வது, தொழில் வியாபாரம் போன்றவற்றைத் தொடங்குவது, அல்லது அதன் வளர்ச்சிக்காக கடன் வாங்குவது போன்றவை உங்களுக்கு லாபம் தரக் கூடியதாக இருக்கும்.


சதயம் வதை தாரை நட்சத்திரங்கள்.


கிருத்திகை,உத்திரம் ,உத்திராடம்


அசுப தாரை
இந்த மூன்று நட்சத்திரங்களும் வதை தாரை நட்சத்திரங்களாகும். வதை என்றால் மிகக் கடுமையான துன்பங்களை அனுபவிப்பது என்று பொருள். எனவே, இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் எந்த ஒரு சுப காரியமும் செய்யாமல் இருப்பது சிறப்பு. மேலும் தொலை தூர பிராயணங்கள், வெளியூர், வெளிநாட்டு பிராயணங்கள் ஆகியவற்றை தவிர்ப்பது மிகவும் நல்லது.

அனுமனின் ஜென்ம நட்சத்திரம் மூலம், ராமனின் ஜென்ம நட்சத்திரம் புனர்பூசம், மூலத்தின் வதை தாரை புனர்பூசம் எனினும், ராமனின் நட்சத்திரம் புனர்பூசத்திற்கு அனுமனின் மூலம் க்ஷேம தாரை ஆகும். எனவே ராமபிரான் தனது க்ஷேம தாரை மூலத்தில் பிறந்த அனுமனை தனது நண்பராக்கிக் கொண்டு ராவணனை எதிர்த்து போர் செய்தார், எனினும் அனுமனுக்கு வதை தாரை ராமன் என்பதால், ராமருக்கு உதவுகின்ற போது அனுமன் பல இக்கட்டான தருணங்களையும் மற்றும் ஆபத்துகளையும் சந்தித்தார்.


சதயம் மைத்ர தாரை நட்சத்திரங்கள்


ரோகிணி,ஹஸ்தம்,திருவோணம்


சுப தாரை
இந்த மூன்று நட்சத்திரங்களும் மைத்ரம் என்னும் நன்மைகள் தரக்கூடிய நட்சத்திரங்களாகும். இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் மேற்கொள்ளும் எந்தவொரு விஷயமும் உங்களுக்கு நன்மை தரக்கூடியாத இருக்கும். ஆதாயம் தரக்கூடிய காரியங்களைச் செய்யலாம். தொழில் மற்றும் வியாபார நிமித்தமாக பயணங்களை மேற்கொள்ளலாம். அயல்நாடு தொடர்பு உடைய தொழில் மற்றும் வியாபார விஷயங்கள் மேற்கொள்ளலாம்.


சதயம் அதி மைத்ர தரை நட்சத்திரங்கள்


பரம மைத்ர தாரை

மிருகசிரீஷம் ,சித்திரை,அவிட்டம்


சுப தாரை
இந்த மூன்று நட்சத்திரங்களும் அதிமைத்ரம் எனும் அதிக நன்மைகளைத் தரும். இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் மேற்கொள்ளும் எந்தக் காரியமும் உங்களுக்கு அதிகப்படியான நன்மைகளைத் தரக் கூடியதாக இருக்கும். அயல்நாட்டுப் பயணங்கள், அயல்நாடுகளில் வேலைக்கு முயற்சி செய்வது, வெளிநாடுகளில் வசிப்பவர்கள் அந்த நாட்டுக் குடியுரிமை பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவது, ஆன்மிகப் பெரியோர்களைச் சந்திப்பது, ஆலய தரிசனங்கள் மேற்கொள்வது என அனைத்தும் உங்களுக்கு நன்மை தருவதாக இருக்கும்.

இந்த தாராபலம் எனும் நட்சத்திரப் பட்டியல் சாதாரணமான விஷயம் அல்ல.
"தாரா (பலம்) அறிந்தால் சோரம் போகார்" என்ற ஜோதிடப் பழமொழியை நீங்கள் அறிந்திருக்கலாம். ஆனால் ஒவ்வொரு வெற்றியாளர்களும் அறிந்தோ அறியாமலோ இதன் காரணமாகவே வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

27 நட்சத்திரங்களுக்கான தாராபலம் அட்டவணை